அன்பார்ந்த ஆதனூர் ஊராட்சி பொதுமக்களே!
நான் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்று வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டு_ஆண்டுகள் இரண்டு_ஆண்டுகள் முடிவு பெற உள்ளது. ஏற்கனவே நமது பகுதிக்கு பல்வேறு மக்கள் நல பணிகளை பல துன்பங்கள் வந்தாலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு என் உயிரையே பணையம் வைத்து நமது பகுதிக்காக பணியாற்றி வருகிறேன் என்பது தாங்கள் அறிந்ததே. தற்போது இலவச_கணினி_மையம் இலவச_முடி_திருத்தகம் இலவச_முடி_திருத்தகம் புறக்காவல்_நிலையம் புறக்காவல்_நிலையம் பங்கஜபுரத்தில் புதிய_ரேசன்_கடை புதிய_ரேசன்_கடை ஆதனூர் காலனியில் புதிய_அங்கன்வாடி_கட்டிடம் புதிய_அங்கன்வாடி_கட்டிடம் , ஆதனூர் முதல் கொருக்கந்தாங்கல் வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய_தார்_சாலை , 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்_தேக்கத்_தொட்டி , புதிய பொலிவுடன் ஆதனூர்_ஊராட்சி_மன்ற_அலுவலகம் மற்றும் பல்வேறு சாலை பணிகள் நடந்தேறி வருகின்றன. இவை அனைத்து பணிகளும் நமது ஊராட்சியில் நடைபெறுவதற்கு உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தி நிதி ஆதாரத்தை நமக்கு வழங்கி வரும் நமது குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் மாண்புமிகு தா_மோ_அன்பரசன் அவர்கள், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவருமான அண்ணன் கு_செல்வபெருந்தகை M.A.M.L .,அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்கள், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி திருமதி_சரஸ்வதி_மனோகரன் இவர்களின் துணையுடன் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தற்போது இல்லத்தரசிகள் , பள்ளி_மாணவிகளின் செலவினங்களை குறைப்பதற்காக, குறிப்பாக ஏழை எளியவர்களின் நலனில் அக்கறை கொண்டும், சுகாதாரத்தை பேணி காக்கும் வகையிலும், நமது ஊராட்சி முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச_சானிட்டரி_நாப்கின் வழங்கும் இயந்திரம் நிறுவ உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதனூர் ஊராட்சியில் வசிக்கும் அனைத்து இல்லங்களுக்கும் அட்டை(SMART CARD) வழங்கப்பட்டு, அதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 20 நாப்கின் இலவசமாக தாங்கள் மாத, மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு சுமாராக ரூ.600/- வரை சேமித்து பயனடையுமாறு உங்கள் அனைவரையும் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
T . தமிழ்அமுதன் B.Com., M.B.A., L.L.B.,
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஆதனூர்.