இன்று 02.10.2023 திங்கட்கிழமை காந்தி_ஜெயந்தியை முன்னிட்டு காலை 11.00 மணியளவில் நமது ஆதனூர்_ஊராட்சி_மன்ற அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், நமது ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள், நலசங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் மற்றும் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களையும் ஊராட்சி மன்றத் தலைவர் த.தமிழ்அமுதன் B.COM., MBA., LLB., ஆகிய என்னிடம் வழங்கினர். பொது மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளேன்.
மேலும், ரவுடிகளின் தொடர் கொலை மிரட்டலில் இருந்து ஆதனூர் ஊராட்சியையும், என்னையும் கண்ணுக்கு இமை போல் காத்து வரும் தாம்பரம் காவல்_ஆணையர் அவர்களுக்கும், மணிமங்கலம் காவல் உதவி_ஆணையர் அவர்களுக்கும், காவல் ஆய்வாளர்களுக்கும் மற்றும் காவலர்களுக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். இதில், சிறப்பு அழைப்பாளராக மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள், மணிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பற்றாளர் திருமதி_சங்கீதா அவர்கள், கிராம நிர்வாக அலுவலர் திரு சக்திவேல் அவர்கள், கிராம செவிலியர் திருமதி.மனோன்மணி அவர்கள், அங்கன்வாடி பணியாளர் திருமதி_வசந்தி அவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணியாளர் திருமதி M.சுசிலா அவர்கள், 7-வது வார்டு உறுப்பினர் திரு P.வெங்கடேசன் அவர்கள் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும், நலசங்க நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக துணைத் தலைவர் செல்வி_ரவி அவர்கள் நன்றி தெரிவித்துத் கொண்டார்.
அன்புடன்,
T.தமிழ்அமுதன் B.Com., M.B.A., L.L.B.,
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஆதனூர்.