அன்பார்ந்த ஆதனூர் ஊராட்சி பொதுமக்களே!!
இன்று (13.06.2023) செவ்வாய்க்கிழமை மாண்புமிகு #தமிழக முதலமைச்சர் #தளபதி அவர்களின் நல்லாசியுடன் சிறு குறு தொழில் துறை அமைச்சரும் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #தா_மோ_அன்பரசன் ,காஞ்சி மாவட்ட குழு பெருந்தலைவரும் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என் அரசியல் ஆசான் அண்ணன் படப்பை
#ஆ_மனோகரன்,MA,MBA அவர்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன்
#கு_செல்வப்பெருந்தகை M,A,M,L, குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என் பாசத்திற்குரிய சகோதரி திருமதி #சரஸ்வதி மனோகரன் அவர்களின் பெரும் முயற்சியால் #ஆதனூர் கொருக்கதாங்கல் வழியாக செல்லும் சாலைகள் சிதலம் அடைந்து மக்கள் பயன்பாட்டிற்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர்திகள் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் கடந்த #பத்து வருடங்களாக பொதுமக்கள் அவதியற்று வந்தனர், இதை போக்கும் வகையில் கடந்த ஆறு மாதங்களாக ஊராட்சி சார்பாக பல்வேறு #மனுக்களை நமது வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #தா_மோ_அன்பரசன் அவர்களிடம் மனு அளித்திருந்தோம் நமது அமைச்சரும் ,ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் ,காஞ்சி மாவட்ட குழு பெருந்தலைவரும் எடுத்த கடின முயற்சியால் இன்று #ஆதனூர் #கொருக்கதாங்கள் வழியாக மாடம்பாக்கம் வரை சுமார் 4.5 கிலோமீட்டர் தார் சாலை மதிப்பு 2 கோடியே 63 லட்சத்தி 23 ஆயிரம் மதிப்பீட்டில் இன்று நமது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
#கு_செல்வபெருந்தகை M,A,M,L மற்றும் குன்றத்தூர் பெருந்தலைவர் என் அன்பு சகோதரி #சரஸ்வதி மனோகரன் அவர்களது திருக்கரங்களால் இனிதே #பூஜை உடன் இச்சாலை பணி துவங்கியது உடன் மாவட்ட குழு உறுப்பினர் திருமதி #அமுதா செல்வம், ஆதனூர் கரசங்கால் ஒன்றிய குழு உறுப்பினர் #மலர்விழி தமிழ்அமுதன் MA, மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நான் (#T_தமிழ்அமுதன் Bcom,MBA ,LLB) ஊராட்சி மன்ற தலைவர் அனைவரையும் வரவேற்று இச்சாலைக்காக விடாமுயற்சியாக பணியாற்றிய அனைவருக்கும் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
இவன்,
#Tதமிழ்அமுதன் Bcom,MBA,LLB,
ஊராட்சி மன்ற தலைவர்.