இன்று 18.08.2023 வெள்ளிக்கிழமை ஆதனூர் ஊராட்சியில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்கள், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் ஆகியோர்களின் பரிந்துரையின்படி, ஆதனூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக சாலையே அமைக்கபடாத பகுதியான
#M_G_நகர்_VII-ல் சுமார் 130 மீட்டர் அளவிற்கு 15-வது மத்திய நிதி ஆணையத் திட்டத்தின் (15-TH CENTRAL FINANCE COMMISSION) மூலம் ரூ.8,52,222/- மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளின் தரம் குறித்து ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM.,MBA.,LLB., ஆகிய நான் ஆய்வு செய்தேன். அப்போது அப்பகுதியை சார்ந்த பெண்களும், பொதுமக்களும் நேரில் வந்து தங்கள் பகுதிக்கும் சேர்த்து சாலைகளை விரிவாக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதனை சுற்றியுள்ள சுமார் 290 மீட்டர் அளவுள்ள சாலைகளை சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் பஞ்சாயத்து நிதியிலிருந்து அமைத்து தருவதாக உறுதியளித்து, மொத்தம் 420 மீட்டர் அளவிற்கு சாலைகளை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரான எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.