இன்று 29.06.2023 வியாழக்கிழமை அன்று குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்களும், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் ஆகியோர்களின் பரிந்துரையின்படி, ஆதனூர் ஊராட்சியில் உள்ள #கொருக்கந்தாங்கல் மற்றும் #ஆதனூர்_துலுக்கானத்தம்மன்_கோயில்_தெரு ஆகிய பகுதிகளில் #ஜல்_ஜீவன்_மிஷன்_திட்டத்தின் மூலமாக சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு #குடிநீர்_தேக்கத்_தொட்டிகள் தலா இரண்டு தொட்டிகள் ரூ.27,50,000/- (எழுத்தில் இருப்பத்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என மொத்தம் ரூ.55,00,000/- (எழுத்தில் ஐம்பத்து ஐந்து லட்சம் மட்டும்) மதிப்பீட்டில் உடனடியாக கட்டப்பட்டு வருகின்றது. அதனொரு கட்டமாக இன்று தளம் (Roof) அமைக்கப்பட்டது. இப்பணிகளின் தரம் குறித்து ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM., LLB., ஆகிய நான் ஆய்வு செய்து, இப்பணிக்களை விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டேன். இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுவதால் பொதுமக்கள் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.