தமிழினத் தலைவர் #டாக்டர்_கலைஞர் அவர்களின் #நூற்றாண்டு_பிறந்தநாள்_விழாவை முன்னிட்டு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்கள், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, ஆதனூர் ஊராட்சி முழுவதும் வார்டு வாரியாக 20.05.2023 முதல் 03.06.2023 வரை #இலவச_மாபெரும்_கண்_சிகிச்சை மற்றும் #சர்க்கரை_நோய்_மருத்துவ_முகாம் நடைபெறுகின்றது. மேலும், இம்முகாமில் பரிசோதிப்பவர்களுக்கு கண் கண்ணாடி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இம்முகாமின் தொடக்கமாக நமது .C.நகர் பகுதியில் உள்ள #கலைஞர்_பூங்காவில் இன்று 20.05.2023 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ஊராட்சி மன்றத் தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM.,MBA.,LLB., ஆகிய என் தலைமையில் தொடங்கப்பட்டது. உடன் ஆதனூர்-கரசங்கால் ஒன்றிய குழு உறுப்பினரும், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான #திருமதி_மலர்விழி_தமிழ்அமுதன் அவர்கள், #K_தமிழ்ச்செல்வன் MBBS.,MD., அவர்கள், ஊராட்சி மன்றத் துணை தலைவர் #செல்வி_ரவி அவர்கள், 8-வது வார்டு உறுப்பினர் #கலைச்செல்வி_ஸ்ரீதர் மற்றும் #R_செல்லசாமி அவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்துகொடுத்ததற்கு பொதுமக்கள் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.