அன்பார்ந்த ஆதனூர் ஊராட்சி பொதுமக்களே! வணக்கம்!
தற்போது ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் சாமான்ய மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது நமது #தமிழக_முதலமைச்சர் அவர்கள் விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இரவு பகல் என்றும் பாராமல் “மக்கள் பணியே; மகேசன் பணி” என்று தன்னை முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுத்தி விலைவாசியை கட்டுப்படுத்தி வருகிறார் என்பதை தமிழக மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அவருடைய வழியில் வரும் என் போன்ற சாதாரண ஊராட்சி மன்றத் தலைவர்கள் நமது ஊராட்சிக்கு சிறு துரும்பாக உதவிட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் தற்போது எங்கள் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்களும், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் இவர்களின் நல்லாசியுடன் வருகின்ற 29.07.2023 சனிக்கிழமை மற்றும் 30.07.2023 ஞாயிற்றுக்கிழமைகளில் (வாரந்தோறும்) #வெளிச்சம்_அறக்கட்டளை மற்றும் #ஆதனூர்_ஊராட்சி_மன்றமும் இணைந்து #DR_கலைஞர்_அழகு_நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, நமது பகுதியில் வாழும் மாணவர்களுக்கு இலவசமாக முடி வெட்டுதல் (HAIR CUT) செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
#வயது வரம்பு: 1 முதல் 18 வயது வரை
#இடம்: ஜவகரய்யா நகர் மெயின் ரோடு
#ஆரம்ப_நாள்: 29.07.2023 சனிக்கிழமை 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை
#நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
#சான்றிதழ்: ஆதனூர் பகுதியில் இருப்பிடச் சான்று. (குறிப்பாக ஆதார் அட்டை அவசியம் )
#வேலை_நாட்கள்: அனைத்து மாதங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
சாதாரணமாக முடிவெட்ட குறைந்தபட்சம் மாதம் ரூ.100 கொடுக்கிறோம்.
– மொத்தம் 12 மாதம் X 100 = 1200 ஒரு நபருக்கு.
– 1200 X 5 வருடங்கள் என்று எடுத்துக் கொண்டால் ரூ.6000 ஒரு நபருக்கு.
– உதாரணமாக ஒரு நாளைக்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறைந்தபட்சம் 30 நபர்களுக்கு முடி வெட்டுதல் செய்யப்படும்.
ஆக,
சனிக்கிழமை – 30 நபர்
ஞாயிற்றுக்கிழமை – 30 நபர்
மொத்தம் = 60 நபர்
நபர் ஒன்றுக்கு ரூ.100/- என்று எடுத்துக் கொண்டால் 2 நாட்களுக்கு – 60 X 100 = 6000/-
மாதத்தில் 8 நாட்கள் :-
8 X 30 = 240 நபர்
240 X 100 = 24000/-
ஒரு வருடத்தில் :-
24 X 30 = 720 நபர்
720 நபர் X ரூ.100 = 72,000/-
5 வருடத்தில் :-
120 X 30 = 3600 நபர்
3600 நபர் X ரூ.100 = 3,60,000/-
(ரூபாய் மூன்று லட்சத்து அறுபது ஆயிரம்) என்று மக்கள் பணம் சேமிக்கப்பட்டு, ஆதனூர் மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.
நன்றி!
வணக்கம்!!