Achievements

2Kg Tomato free to family card holders

அன்பார்ந்த ஆதனூர் ஊராட்சி பொதுமக்களே!
தற்போது ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் சாமான்ய மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது தமிழக முதல்வர் #தளபதி அவர்கள் போர்க்கால அடிப்படையில் விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அவருடைய சிந்தனையில் வளரும் என் போன்ற மக்கள் சேவை ஆற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களை ஊக்குவித்து வரும்
குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்களும், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் இவர்களின் நல்லாசியுடன் #வெளிச்சம்_அறக்கட்டளை மற்றும் #ஆதனூர்_ஊராட்சி_மன்றமும் இணைந்து ஆதனூர் பகுதியில் வசிக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு #2_கிலோ_தக்காளி இலவசமாக கொடுக்கப்படும். ஆதனூர் மொத்தம் 3000 அட்டைதாரர்கள் உள்ளனர். இதனால் சுமார் 6000 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வெளிச்சம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் #த_தமிழ்அமுதன் B.COM.,MBA.,LLB., ஆகிய நான் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால், நமது பகுதியை சார்ந்த #குடும்ப_அட்டைதாரர்கள் நாளை 18.07.2023 #செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒரிஜினல் (ORIGINAL RATION CARD) குடும்ப அட்டையுடன் நேரடியாக ஊராட்சி மன்ற சமுதாய நலக்கூடத்திற்கு வருகை தந்து 2 கிலோ தக்காளியை பெற்றுக் கொள்ளலாம். மேலும், 2 கிலோ தக்காளியை எடுத்து செல்வதற்கு #கைப்பை அவசியம் எடுத்து வரவும்.
நன்றி!
வணக்கம்!!
 
– என்றும் அன்புடன்,
ஊராட்சி மன்றத் தலைவர்

You may also like

Achievements

Fund for Public Welfare of Kundrathur Union Manimangalam Police Station

  • February 10, 2023
இன்று 10.02.2023 அன்று எனது நிர்வாகம் (CLASSIC GROUP OF COMPANIES) #கூட்டாண்மை_சமூக_பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பொதுமக்கள் நலன் கருதி, குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் காவல் நிலையத்திற்காக
Achievements

Stalin 70th Birthday

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், #ஆதனூர்_ஊராட்சி தி.மு.க சார்பில் #மாண்புமிகு_முதல்வர்– #கழகத்_தலைவர்_தளபதி அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 19.03.2023 அன்று மாலை 5.00